தமிழகம்

மாதா ஆலய திருவிழாவையொட்டி 200 அரசு சிறப்பு பேருந்துகள் வேளாங்கண்ணிக்கு இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திரு விழாவை முன்னிட்டு, பொதுமக்க ளின் வசதிக்காக அரசு விரை வுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை, பெங்களூரு, திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி, நாகர்கோவில், திருவனந்த புரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து தேவைக்கேற்ப அதிநவீன மிதவைப் பேருந்துகள், இருக்கை வசதி கொண்ட குளிர் சாதனப் பேருந்துகள் என 200 பேருந்துகள் இயக்கப்படும்.

வரும் 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரையில் என 16 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவுகளை www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com இணையதளங் கள் மூலமாகவும் செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT