சென்னை
நிலவை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 விண்கலம் அனுப்ப திட்டமிட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சந்திரயான்-2 விண் கலம் இப்போது குறைந்தபட்சம் 118 கி.மீ., அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதையில் நிலவை வலம் வரு கிறது. இனிவரும் நாட்களில் விண் கலத்தின் சுற்றுப்பாதை தொடர்ந்து குறைக்கப்படும். இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை யில் 1.40 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சிகள் தொடங்கும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் விண்கலம் தரையிறக்கப்படும்.
இந்த நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. சந்திரயான் தரை யிறங்கும் கடைசி 30 நிமிடங்கள் தான் நமக்கு மிக சவாலாக இருக் கும். விண்கலத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து பூஜ்ஜிய அளவுக்கு கொண்டுவருவது சிக் கலான ஒன்று. அதை வெற்றிகர மாக முடிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அடுத்தடுத்து சூரியன், செவ் வாய் உள்ளிட்ட கோள்களை ஆய்வு செய்யவும் செயற்கைக் கோள்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன. இதுதவிர சந்திரயான் - 3 திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. சந்திரயான்- 2 விண்கலம் நில வில் தரையிறங்குவதை பார்வை யிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவன் கூறினார்.