தமிழகம்

கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் விவகாரம்: தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

செய்திப்பிரிவு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் வகுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற் பேட்டை 1964-ல் தொடங்கப் பட்டது. 470 ஹெக்டேர் பரப்பள வில் செயல்பட்டு வரும் இத் தொழிற்பேட்டையில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இந்த தொழிற்பேட்டை யில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டுள்ள நிலையில், கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற் றப்படுவதாகக் கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இத்தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கவுன்சிலர் தமிழ்செல்வன் தலைமையில் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக கவுன்சிலர் தமிழ்செல்வன் கூறியதாவது:

அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் பல்வேறு ரசாயன தொழிற் சாலைகள் செயல்பட்டு வருகின் றன. இத்தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இது பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது. இதனால் அங் குள்ள பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மழைநீர் கால்வாயில் விடப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் பின்னர் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம். தற்போது மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம். விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது மாநகராட்சி சுகாதாரத்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT