தமிழகம்

9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை

தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதற்கிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் மற்றும் பிளஸ் 2 பாடங்கள் நடத்துவதாக சிபிஎஸ்இ-க்கு பெற்றோர் தரப்பில் இருந்துஆண்டுதோறும் புகார்கள் வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எல்லா பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், ‘‘சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங்கியுள்ள பாடங்களை மட்டுமே 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டும். அதை மீறி வேறு பாடங்களையோ அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களையோ நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்’’என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT