தமிழகம்

போரூர் ஏரியை அரசு கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்: மதுரவாயல் எம்.எல்.ஏ உட்பட 59 பேர் கைது

செய்திப்பிரிவு

போரூர் ஏரியை அரசு முழுமையாக கையகப்படுத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று போரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் எம்எல்.ஏ., உட்பட 59 பேர் கைது செய்யப்பட் டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 800 ஏக்கர் பரப்பளவு கொண் டிருந்த போரூர் ஏரி நாளடைவில், சுருங்கிவிட்டது. போரூர் ஏரியில் 17 ஏக்கர் பகுதி, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமானதாக உள்ளது. ஆனால், அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம், தனக்கு சொந்தமான ஏரிப் பகுதியுடன், பொதுப்பணித் துறைக்கு சொந்த மான போரூர் ஏரியின் 17 ஏக்கர் பகுதியை ஆக்கிரமித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுப்பணித் துறைக்கு சொந்த மான அந்த 17 ஏக்கர் பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கைப்பற்றி, கரைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், போரூர் ஏரிப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பகுதியை அரசு கையகப்படுத்தவேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேற்று காலை போரூர் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை திடீரெனஅனுமதி மறுத்த நிலை யில், நேற்று காலை 10 மணியள வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இச்சூழலில், மதுரவாயல் எம்.எல்.ஏ., பீம்ராவ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தங்கள் கட்சியின் கொடிகளை ஏந்தியவண்ணம், காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கினர்.

இதில், போரூர் ஏரியை சுத்தப் படுத்தி, அகலப்படுத்தி ஆக்கிரமிப்பு களை தமிழக அரசு அகற்ற வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை ஆர்ப் பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, மதுரவாயல் எம்.எல்.ஏ., தங்கள் கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். ஆனால் அவர் செய்தி யாளர்களுக்கு தொடர்ந்து பேட்டி அளிக்காமல் தடுக்க முயன்றார் காவல்துறை உயரதிகாரி ஒருவர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது.

இதனால், ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னைச் சேர்ந்த பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட் டது. போலீஸார் சாலை மறிய லில் ஈடுபட்டவர்களை வலுக்கட் டாயமாக சாலையிலிருந்து அப் புறப்படுத்தி கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுரவாயல் எம்.எல்.ஏ., பீம்ராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம், மதுரவாயல் பகுதி செயலாளர் லெனின் உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT