சென்னை
காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யக் கோரி டெல்லி யில் நாளை (ஆகஸ்ட் 22) திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் 75-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அலங்கரிக்கப் பட்ட ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வீ.தங்கபாலு, மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர், எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்டத் தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் காங் கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்டோர் ரத்த தானம் செய் தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
இளம் வயதிலேயே பிரதம ரான ராஜீவ்காந்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி னார். இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் இட்ட அடித் தளமே காரணம். அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ள தற்கு அவர் ஆட்சியில் எடுக்கப் பட்ட முன்முயற்சிகளே காரணம். இலங்கைத் தமிழர்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு காண ராஜீவ் காந்தி தீவிர முயற்சி மேற் கொண்டார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி 2-வது முறையாக பதவியேற்றுள்ள நிலை யில் நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் சட் டத்தை மீறி, காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அம் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக் கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி வரும் 22-ம் தேதி (நாளை) டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப் பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க் களும் பங்கேற்பார்கள். ஜனநாய கத்தைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப் போதுமே ஆதரவளிக்கும்.
கர்நாடகத்தில் கோயில் விழா வில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி யில் தமிழ் பாடல்கள் பாடிய பாடகர்கள் தாக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.