தமிழகம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய அளவில் 7-வது இடத்தில் தமிழகம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

சீர்மிகு நகர திட்டத்தை (ஸ்மார்ட் சிட்டி) செயல்படுத்துவதில் தமிழகம் தேசிய அளவில் 7-வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, வேலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். அதன்பின் அமைச்சர் கூறியதாவது:

நாடு முழுவதும் 100 நகரங் களைத் தேர்வு செய்து அவற்றை சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு நகரத்துக்கும் ரூ.500 கோடி நிதியுதவி வழங்கு கிறது. இதற்கு இணையான ரூ.500 கோடியை தமிழக அரசும் வழங்குகிறது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 நகரங்களில் ரூ.10 ஆயிரத்து 440 கோடி மதிப்பில் 357 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.240 கோடியில் 57 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.5 ஆயிரத்து 340 கோடியில் 184 திட்டப்பணிகள் நடந்து வரு கின்றன. ரூ.575 கோடியில் 10 திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கள் ஆய்வு நடந்து வருகிறது. ரூ.439 கோடியில் 18 திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள் ளன.

ரூ.625 கோடியில் 15 திட்டங் களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோர தயாராக உள்ளது. ரூ.728 கோடியில் 5 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வு நிலையில் உள்ளது. ரூ.2 ஆயிரத்து 493 கோடியில் 68 திட்டப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயா ரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் 36 மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட செய லாக்கத்தில் தமிழகம் 120.72 புள்ளி களுடன் 7-வது இடத்தில் உள்ளது. இந்த திட்டங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்துக்கும் செப்.30-ம் தேதி இறுதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலுவை திட்டங்களுக்கு விரி வான திட்ட அறிக்கை தயாரித்து, அக்டோபர் 1-க்குள் ஒப்பந்தப்புள்ளி கள் கோர வேண்டும். பணிகள் அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருந்தால் உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக் குள் பணிகள் முடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கா.பாஸ்கரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன் பேரூராட்சிகள் இயக் குநர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT