சென்னை
சென்னையில் மெட்ரோ ரயில் களில் பயணம் செய்யும் பயணி கள், தங்களது சொந்த வாகனங் களை நிறுத்துவதற்கு 23 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத் தும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் வகைகளுக்கு ஏற்றவாறும், கால அளவுக்கு ஏற்றவாறும் கட்டணம் வசூலிக் கப்படுகிறது.
வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த வேண்டுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. பின்னர், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், பயண அட் டையை இப்போதே வாங்கி வாகன நிறுத்த கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்து வதாக பயணிகள் புகார் தெரி விக்கின்றனர்.
இதுதொடர்பாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் கூறியதாவது:
செப்டம்பர் 1-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணத்தை பயண அட்டை மூலம் செலுத்த வேண்டு மென நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போதே பயண அட் டையை வாங்கி கொண்டு வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்த வேண்டுமென அங்குள்ள ஊழியர் கள் கட்டாயப்படுத்துகின்றனர். இல்லாவிட்டால், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்கின்றனர்.
பயணிகளிடம் கெடுபிடி
மேலும், பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்திய பிறகு, மெட்ரோ ரயிலில் பயண கட்டணத்துக்கான தொகையில் கூடுதலாக ரூ.4 வரை பிடித்தம் செய்வதாக சில பயணிகள் கூறுகின்றனர். நிர்வாகம் வழங் கும் டிரிப் கார்டுகளைப் பயன் படுத்த அனுமதி மறுப்பது ஏன் என தெரியவில்லை. எனவே, பயணிகளிடம் கெடுபிடி காட்டு வதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.