ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
ஆவின் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்திய போதிலும், உற்பத்தியாளருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 இழப்பு ஏற்படுகிறது. இந்த விலை உயர்வு ஆவினுக்குத்தான் லாபம் எனக் கூறப்படுகிறது.
தமிழக அரசுத்துறை நிறுவனமான ஆவின், ஆக. 19-ம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது. இதனால் அனைத்து வகை பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 அதிகரித்தது. இந்த விலை உயர்வைக் காரணமாகக் கூறி ஹோட்டல்கள், கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
ஆனால், இந்த விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை தரவில்லை, ஆவின் நிர்வாகத் துக்குத்தான் ரூ.5 வரை லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை உதவிப் பேராசிரியர் கி. ஜெகதீசன் கூறிய தாவது:
ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.40 செல வாகிறது. ஒரு பொருளின் விற் பனை விலை என்பது உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் சேர்த்து நிர்ணயம் செய்வதுதான் சரி யானது, நடைமுறையும்கூட. அப்படிப் பார்த்தால் பாலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 60 (40+20) இருக்க வேண்டும்.
ஆனால், நடைமுறையில் பால் உற்பத்தியாளரிடமிருந்து அரசு ரூ.36.50-க்கு மட்டுமே கொள் முதல் செய்கிறது. அதனால் ஒரு லிட்டருக்கு ரூ.23.50 இழப்பு ஏற்படுகிறது.
இது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலின் ஊட்டச்சத்துகளைத் தரநிர்ணயம் செய்து, பதப்படுத்தி ஒரு லிட்டர் பாலை ரூ.47-க்கு விற்பனை செய்கிறது. தர நிர்ண யத்துக்கு ஆவின் சராசரியாக ஒரு லிட்டருக்கு ரூ.5 செலவிடுகிறது.
ஆவின் அரசுத்துறை நிறுவனமாக இருப்பதால் ‘பூஜ்ஜிய லாபம்’ எனும் அடிப்படையில் நுகர்வோருக்கு ஒரு லிட்டர் பாலை ரூ.41.50-க்கு (36.50+5) மட்டுமே விற்க வேண்டும். ஆனால், ரூ.47-க்கு விற்கிறது. அதனால், ஆவினுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.5.50 லாபம் கிடைக்கிறது.
இழப்பு ஏற்படாமல்...
இந்த விலை உயர்வு ஆவினுக் கும், அரசுக்கும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால், உற்பத்தியாளர் களுக்கு மகிழ்ச்சி இல்லை. 50 சத வீத லாபம் கொடுக்காவிட்டாலும், இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஆவினின் தார்மீக கடமை.
எனவே, லிட்டருக்கு கொள் முதல் விலையாக ரூ.40 வழங்க வேண்டும். ஆனால், ஆவின் கொடுப்பதோ ரூ.36.50. இதனால், உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.3.50 நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறினார்.நடைமுறையில் பால் உற்பத்தியாளரிடமிருந்து அரசு ரூ.36.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதனால் ஒரு லிட்டருக்கு ரூ.23.50 இழப்பு ஏற்படுகிறது.