திருநெல்வேலி
``நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முடிவு செய் யப்படும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை யொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்த மணி மண்டபம் கட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு கொண்டுவரப் பட்டது. அதிமுக ஆட்சியில் பால் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக பால் விலையை உயர்த்துவதாக அரசு தெரிவித்திருப்பது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் செயல். பால் வளத்துறை லாபத்தில் செயல்படு வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். ஆனால் நஷ்டத்தில் இருப்பதாக முதல்வர் சொல்கிறார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு அறிவிக்கப்படும். தமிழகத் தில் லஞ்சலாவண்யங்களை மறைக்கவே மாவட்டங்களை பிரிக்கும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
காஷ்மீர் பிரச்சினையை முன்னி றுத்தி டெல்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். தமிழக மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்க ளுக்காகவும் நாங்கள் போராடு கிறோம்.
நாடு முழுக்க அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தை மறைக்கும் வகையில் காஷ்மீர் பிரச்சினையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.