தமிழகம்

மொழி பற்றிய அடிப்படை விவரம் கூட செல்லூர் ராஜூக்கு தெரியவில்லை: வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை

மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் காலை மதுரை வந்தார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.கே. நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேரிய நிலையில் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மத்திய அரசு மொழிப் பாகுபாடு பார்ப்பதில்லை என அமைச்சர் செல் லூர் ராஜூ கூறியிருப்பது பற்றிய மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த வைகோ, இந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் வெறியில் மத்திய அரசு செயல்படுகிறது. மொழி பற்றிய அடிப்படை விவரம்கூட தெரியாமல் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசி இருக்கிறார் என்றார்.

SCROLL FOR NEXT