திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் கவிழ்ந்து 8 பேர் இறந்த சாலையோர கிணற்றையொட்டிய பகுதியில் 17 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
முசிறி அருகேயுள்ள பேரூரைச் சேர்ந்த குணசீலன்(75), தனது குடும் பத்தினர், உறவினர்கள் 16 பேருடன் மினி வேனில் சிறுநாவலூர் புதூரில் உள்ள அழகு நாச்சியம்மன், கருப்ப சாமி கோயில் முப்பூசை கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் சென்றபோது, திருமனூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், சாலையோர இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு 80 அடி ஆழ கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் குணசீலன் அவரது மனைவி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். போலீ ஸார் நடத்திய விசாரணையில், ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் விபத்து நடை பெற்ற இடத்தில் ஏற்கெனவே, கிணற்றையொட்டி அமைக்கப்பட்டு இருந்த இரும்புத் தடுப்புக்குப் பதிலாக கற்களைக் கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் நேற்று காலை தொடங்கியது. கிணற் றுக்கும், சாலைக்கும் இடையே தரைக்குக் கீழ் 2 மீட்டர், தரைக்கு மேல் 1 மீட்டர் என மொத்தம் 3 மீட் டர் உயரத்தில் 17 மீட்டர் தூரத் துக்கு இந்த தடுப்புச் சுவர் கட்டப் படுகிறது.
இப்பணிகளை மாநில நெடுஞ் சாலைத் துறை திருச்சி வட்ட கண் காணிப்பு பொறியாளர் எஸ்.பழனி நேற்று ஆய்வு செய்தார். அப்போது இத்தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வும், இதுதவிர நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி வட்டத்தில் சாலை யோர நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் பள்ளமான பகுதிகளை ஒட்டிய ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து பாதுகாப்பை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ரூ.2 லட்சம் நிதியுதவி
இதற்கிடையே, விபத்தில் இறந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு முதல் வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில் அமைச்சர்கள் என்.நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று இறந்தவர்களின் குடும்பத்தினரி டம், தலா ரூ.2 லட்சம் வழங்குவ தற்கான செயல்முறை ஆணையை வழங்கினர். திமுக சார்பில் முன் னாள் அமைச்சர் கே.என்.நேரு உள் ளிட்டோர் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் தெரி வித்தனர்.