ஈரோடு
திமுக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றால், டிசம்பர் மாதம் உள்ளாட் சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த ஓடத்துறையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பால் விலையை இன்னும் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்களும், குறைக்க வேண்டும் என்று மக்க ளும் கூறுகின்றனர். இதில் முதல் வர் பழனிசாமி நல்ல முடிவை எடுத்துள்ளார். திமுக தொடர்ந்த வழக்கினால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திமுக திரும்பப்பெற்றால், டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடை பெறும்.
அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தார். இப்போது கனிமொழி எம்.பி., இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்று கூறி வருகிறார். இவர்களின் எண்ணம் எல்லாம் கனவாகத்தான் இருக்கும்.
கடந்த முறை திமுக ஆட்சி செய்தபோது, 2 ஏக்கர் நிலம் கொடுப் போம் என்று கூறி மக்களை ஏமாற் றினார்கள். அதனால், அவர்கள் 10 ஆண்டுகள் ஆட்சிக்கே வரமுடிய வில்லை. அதைப்போன்று, மக்கள வைத் தேர்தலில், நகை கடன் தள்ளு படி, விவசாயக் கடன் தள்ளுபடி, மாதம் 6 ஆயிரம் வழங்குவோம் என்று பொய் கூறி வெற்றி பெற்றார் கள். இதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.
எனவே, இன்னும் 10 ஆண்டுக ளுக்கு மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது. திமுக கூட்டணி சார்பில் 38 எம்பிக்கள் டெல்லி சென் றாலும், அவர்களால் தமிழகத் துக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர முடியாது என்றார்.