தமிழகம்

13 மாவட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எம்.பி., எம்எல்ஏக்களுடன் ஆலோசனை: தலைமை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை

மதுரை மாவட்ட நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தக்கோரி வழக்கறிஞர் அருண்நிதி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும், நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிப் பில் உள்ளன. பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா தரப்பட்டுள்ளது எனக் கூறப் பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய் தார்.இதேபோல் பல்வேறு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலர் தனித்தனியாக மனுக் களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தன. பின்னர், நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:

உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் எல்லைக்கு உட்பட்ட மதுரை, நெல்லை, திருச்சி உட்பட 13 மாவட் டங்களில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வும், இம்மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தி தூர் வாருவது தொடர்பாக தலைமைச் செயலர், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி ஆகிய துறை செயலர்கள், 13 மாவட்ட ஆட்சியர்கள், எம்பி, எம்எல்ஏக் களுடன் ஆலோசிக்க வேண்டும்.

இந்த வழக்கில் நீதிமன்றத் துக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வீராகதிரவனும் பங்கேற்க வேண்டும். இந்தக் கூட் டத்துக்கு பிறகு 13 மாவட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றுவது, ஆழப்படுத்து வது குறித்த வரைவு திட்டத்தை அக்.3-ல் தாக்கல் செய்ய வேண் டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT