தமிழகம்

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க குரல் கொடுப்பேன்: திமுக எம்.பி. வில்சன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை

உச்ச நீதிமன்ற கிளையை சென் னையில் அமைக்க மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன் என்று திமுக எம்.பி. வில்சன் உறுதி அளித்தார்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு எம்பிஏ சங்கத் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, ரகுபதி, மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன், மாசிலாமணி, விடுதலை, ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பி.வில்சனைப் பாராட்டிப் பேசினர்.

பின்னர், பி.வில்சன் பேசிய தாவது:

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். அது போல உச்ச நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தியது போதாது. இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும்.

தற்போது உயர் நீதிமன்றத் துக்கான நீதிபதிகள் தேர்வுக்கு ஒரு மூத்த வழக்கறிஞர், 3 மாவட்ட நீதிபதிகள் என்ற தேர்வு விகிதம் கடைபிடிக்கப்படுகிறது. இதே போல உச்ச நீதிமன்றத்துக்கும் ஒரு மூத்த வழக்கறிஞர், 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்ற தேர்வு விகிதம் கொண்டு வந்து அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்ற கிளையை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்காக பிரித்து ஒரு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். இதற்காக நிச்சயமாக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப் பேன். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT