தமிழகம்

வேலூரில் அதிகபட்ச மழை; தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத் தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 151 மிமீ மழை பதிவானது. இதுதவிர சிவகங்கை, விருதுநகர், திருவள்ளுர், காஞ்சிபுரம், புதுச் சேரி, விழுப்புரம், சென்னை, தர்ம புரி, நீலகிரி, கடலூர், மதுரை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மடிபாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஆவடி, அண்ணா சாலை, தி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மாநகரமே குளிர்ந்து காணப் பட்டது.

மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்தது. இந்நிலையில் மழை மேலும் 3 நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியர சன் நிருபர்களிடம் கூறியதாவது: காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்கள் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் தாக்கம் அடுத்த 3 நாட்கள் வரை நீடிக்கும். குறிப்பாக வேலூர், திருவள்ளூர், நாகை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவக்காலத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 161 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 8 சதவீதம் குறை வாகும்.

அதேநேரம் சென்னை மாநகருக்கு சராசரியைவிட 19 சத வீதம் கூடுதலாக மழை கிடைத் துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசினாலும், மீனவர்களுக்கு எவ் வித எச்சரிக்கையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT