அனந்தசரஸ் குளம் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. படங்கள்: கோ.கார்த்திக் 
தமிழகம்

அனந்தசரஸ் குளத்துக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்புவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவம் நிறை வடைந்து, அனந்தசரஸ் குளத் தின் நீராழி மண்டபத்தில் அத்திவரதர் மீண்டும் வைக்கப் பட்ட நிலையில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து குளம் வேகமாக நிரம்பி வருகின் றது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக அனந்தசரஸ் குளத்தில் 40 ஆண்டு களாக வாசம் செய்து வந்த அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்வதற்காக, 20 அடி ஆழமும், 2.50 ஏக்கர் பரப்பளவும் கொண்ட அந்த குளத்தில் இருந்த தண்ணீர், மின்மோட்டார்கள் மூலம் கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள பொற் றாமரை குளத்துக்கு மாற்றப்பட் டது.

பொற்றாமரை குளத்தில்

அதில் இருந்த மீன்களும் பாது காப்பான முறையில் அந்தக் குளத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, கடந்த 48 நாட்களாக வஸந்த மண்டபத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரு மண்டலம் நிறைவு பெற்றதால் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், சிறப்பு ஆரா தனைகளுக்கு பிறகு சுவாமி சயனம் கொண்டார். இந்நிலையில், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரை மீண்டும் அனந்த சரஸ் குளத்துக்கு மாற்ற திட்ட மிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து மழை பொழிவு

ஆனால், அத்திவரதர் குளத் துக்குள் வைக்கப்பட்டதும் மழைப் பொழிவு ஏற்பட்டு குளம் இயற் கையாகவே நிரம்பும் என உள்ளூர் மக்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதன் படி கனமழை பெய்தது.

இரண்டாவது நாளான நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து குளம் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT