காஞ்சிபுரம்
அத்திவரதர் வைபவம் நடை பெற்றபோது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்த வரதராஜப் பெருமாள் கோயில் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அத்திவரதர் வைக்கப்பட் டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு பொதுமக்கள் செல்ல கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்திவரதர் நேற்று முன்தினம் நள்ளிரவு உரிய பூஜைகளுக்குப் பிறகு அனந்தசரஸ் குளத்தில் வைக் கப்பட்டார். குளத்தில் சிறி தளவே தண்ணீர் இருப்பதால் அந்த குளத்துக்குள் சென்று சுவாமியை காண்பதற்கு பக்தர் கள் முயற்சி செய்யலாம் என்ப தால், அந்த குளத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள தடுப்புகள் இன் னும் அகற்றப்படாமல் உள்ளன. தடுப்புகளைத் தாண்டி குளம் இருக்கும் பகுதிக்கு அருகே யாரும் செல்லாமல் இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இருப்பினும் வரதராஜப் பெரு மாள் கோயிலுக்கு வரும் பொது மக்கள் அந்தக் குளம் இருக்கும் பகுதிக்கு அருகே சென்று குளத்தை பார்த்துவிட்டு வருகின்றனர். 48 நாட்களாக பக்தர்களால் நிறைந்து காணப்பட்ட வரதராஜப் பெருமாள் கோயில் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. கோயில் மூலவரை தரிசிக்க வழக்க மாக வரும் பக்தர்கள் மட்டும் வந்து செல்கின்றனர். போலீஸ் பாதுகாப்பு முழுமையாக விலக் கிக் கொள்ளப்படவில்லை.
வலைதளங்களில்...
இந்தச் சூழ்நிலையில், அனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தண்ணீருக்குள் இருப்பதுபோன்ற படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது பார்ப்பதற்கு அத்திவரதர் நீருக் கடியில் சயனக்கோலத்தில் இருப் பது போன்று தத்ரூபமாக உள்ளது. இதுகுறித்து கோயில் அலுவலர் ஒருவர் கூறும்போது, "அங்கு புகைப்படம் எடுக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த படம் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.