பட்டாச்சாரியர் ரங்கராஜன், அவரது மனைவி விஜயலட்சுமி. படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில் மழை பொழியும்: 1979 வைபவத்தில் பங்கேற்ற பட்டாச்சாரியார் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளுக்கு முன் இரவு தொடங்கிய மழை பொழிவு இறைவனின் ஒரு மண்டல கணக்கு என மூத்த பட்டாச்சாரியார் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று நேற்று நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தின் 47-வது நாள் இரவு முதல் காஞ்சி மாவட்டப் பகுதி களில் மழை பெய்து வந்தது.

இதுகுறித்து 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்ற பட்டாச் சாரியர் ரங்கராஜன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப் பட்ட அத்திவரதர் 48 நாட்கள் பக்தர் களுக்கு அருள்பாலித்துவிட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க வைக்கப்பட்டார். அவர் சயனிக்க வைக் கப்பட்ட அன்றிரவு தொடங்கி 2 நாட்கள் கனமழை பெய்தது.

இம்முறை ஒருநாள் முன்னதாகவே மழை பொழிய தொடங்கியுள்ளது. அத்தி வரதர் வைபவத்தின் 48 நாட்களை ஒரு மண்டல கணக்காக கொண்டு இத்தரு ணத்தில் மழை பெய்ய தொடங்கியுள் ளது. இந்த மழையிலேயே குளம் நிரம்பும் என நம்புகிறோம் என்றார்.

இதுகுறித்து பட்டாச்சாரியார் ரங்க ராஜனின் மனைவி விஜயலட்சுமி கூறிய தாவது: கடந்த 1979-ம் ஆண்டு நடை பெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெறும்போது அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இதற்காக 50 பைசா முதல் ரூ.1 வரை கட்டணம் வசூலிக்கப்பட் டது. அப்போது அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் சயனிக்க சென்றது சனிக்கிழமையில்தான். இம் முறையும் சனிக்கிழமையில்தான் நீராழி மண்டபத் தில் சயனிக்க செல்கிறார் என்றார்.

SCROLL FOR NEXT