தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆர்சுத்தி பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம் மன் கோயிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா நடந்தது. இதற் காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் மகன் கபிலன்(25), புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் பிரகதீஸ்வரன்(26), பாலசுப்பிரமணியன் மகன் ராஜா (18), கருணாநிதி மகன் அருள ரசன்(33), எடமேலையூரைச் சேர்ந்த காசிநாதன் மகன் விவேக் (28), மகேந்திரவர்மன் மகன் ராஜ வர்மன்(29), மதுரையைச் சேர்ந்த மோகன்(20) உட்பட 8 பேரும் இத்திருவிழாவுக்கு வந்திருந்தனர். மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் மன்னார்குடிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
காரை பிரகதீஸ்வரன் ஓட்டி னார். சடையார்கோவில் அருகே சின்னபுளிக்குடிகாடு பகுதியில் ஒரு திருப்பத்தில் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார் சாலையோர பனை மரத்தில் மோதியது.
இதில், படுகாயமடைந்த கபிலன், பிரகதீஸ்வரன், மோகன் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ராஜா, அருளரசன், ராஜவர்மன், விவேக் உள்ளிட்ட 5 பேரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.