சென்னை
ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட் டோக்கள் உள்ளிட்ட வாகனங்களி்ல் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதல் நபர்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மற் றும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக எண்ணிக்கை யில் ஆட்களை ஏற்றிச் செல்வதா கவும் அதிக அளவில் புகார்கள் வருகின்றன.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அதிவேகமாக வாகனங்களை இயக்கிய ஓட்டுநருக்கு முதல் முறை குற்றத்துக்கு ரூ.400-ம், 2-வது முறைக்கு ரூ.ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். வாக னத்தை வேகமாக ஓட்ட அனு மதித்த குற்றத்துக்காக அதன் உரிமையாளருக்கு ரூ.300-ம், மறு முறை குற்றம் செய்தால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
இதேபோல், அச்சுறுத்தும் வகை யில் வேகமாக வாகனத்தை இயக்கினால், முதல் முறை குற்றத் துக்கு ரூ.ஆயிரம் அல்லது 6 மாத சிறைதண்டனை விதிக்கப்படும். இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அதே குற்றத்தை 2-வது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால் 2 ஆண்டு கள் சிறைதண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறி விப்பின்படி, பள்ளி, கல்லூரி வாக னங்கள் உட்பட போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக்கட்டுப் பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் தணிக்கையின் போதோ, அல்லது தகுதிச்சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங் களுக்கு வரும்போதோ வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப் படாமலோ, கருவி இயங்காமலோ இருப்பது கண்டறியப்பட்டால் வாகனத்தின் ‘பெர்மிட்’ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக நபர்களை ஏற்றிச் செல்வது ரூ.100 அபராதம் மற்றும் ‘பெர்மிட்’டின் மீது நடவ டிக்கை எடுக்கக்கூடிய குற்றமாகும். மேலும், பேருந்துகளில் அதிக ஆட் களை ஏற்றிச் செல்வது ‘பெர் மிட்’டை தற்காலிகமாக 30 நாட் கள் தடை செய்வதற்கும் ரூ.9 ஆயிரம் வரை இணக்க கட்டணம் வசூலிக்கவும் சட்டத்தில் வழிவகை உண்டு.
தமிழகத்தில் ஏற்படும் பெரும் பாலான விபத்துகள், வாகனங் களின் அதிவேகத்தாலும் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக நபர்களை ஏற்றிச் செல்வ தாலும்தான் ஏற்படுகிறது. எனவே அவ்வகை வாகனங்களின் ‘பெர்மிட்’ டின் மீது நடவடிக்கையும், வாகனத் தின் ஓட்டுநரின் உரிமத்தை 3 மாதங் களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும்.
இதுதொடர்பாக போக்குவரத் துத் துறையின் அனைத்து அலுவ லர்களுக்கும் உரிய அறிவுறுத் தல் வழங்கப்பட்டு, குற்றங்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1800 425 5430 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.