தமிழகம்

வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில் இன்று லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தமிழக பகுதியில் வளிமண்டல காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரண மாக இன்று, வட தமிழகத்தில் சில இடங்களி லும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகிய இடங்களில் தலா 2 செமீ, திருப்பூர் மாவட்டம் அவிநாசி உள்ளிட்ட இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT