தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.28 ஆயிரத்து 664-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த தாலும், பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங் களாலும் தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.28 ஆயிரத்து 664-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 583-க்கு விற்பனை ஆனது.

இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 618-க்கு விற்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்ததால், சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு மக்கள் கூட்டம் சற்று அதிகரித்திருந்தது. இதனால், கடந்த சில வாரங்களுக்கு பிறகு, தங்கம் வர்த்தகம் கணிசமாக உயர்ந்ததாக நகை கடைகளின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT