ஆவடி
சென்னை, அம்பத்தூரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ‘பசுமை கலாம்’ அமைப்பின் நிறுவன ரும் நடிகருமான விவேக் நேற்று தொடங்கி வைத்தார்.
பசுமை கலாம் மற்றும் அம்பத்தூர் நீர்நிலைகள் பாது காப்பு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் தொடக்க விழா நேற்று அம்பத் தூர், ஒரகடம் தாமரை குளத்தில் நடைபெற்றன. அம்பத் தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகள் நடும் பணியை விவேக் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அம்பத்தூர், ஒரகடம் தாமரை குளத்தில் அம்பத்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற உள்ள தூர்வாரும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து விவேக் கூறியபோது, ‘‘பசுமை கலாம் அமைப்பு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அம்பத்தூர் பகுதியில் தற்போது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை இன்று தொடங்கியுள்ளோம். இதில் 26 குளங்களைத் தேர்ந்தெடுத்து அதன் கரைகளில் 26 ஆயிரம் பனை விதைகளையும் அம்பத்தூர் ஏரிக்கரை மற்றும் புழல் ஏரிக்கரைகளில் 55 ஆயிரம் மரக்கன்றுகளையும் நட உள்ளோம். அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகிக்க உள்ளோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் கல்வி அலுவலர் கருணாகரன், அம்பத் தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன், நகைச் சுவை நடிகர் செல் முருகன் உள்ளிட் டோரும் பங்கேற் றனர்.