பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வந்துள்ள போலீஸார் 
தமிழகம்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை

அத்திவரதர் வைபவத்தில் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி பாராட்டு தெரிவித் துள்ளார்.

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை, ஆட்சியர் பொன்னையா விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் 2 நாட்களுக்கு முன்பு போலீ ஸாரின் பணியைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது. தற் போது தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி காவலர்களை உற்சாகமூட்டும் விதமாக, இரண்டு பக்க கடிதத்தை பாராட்டுச் சான்றிதழாக வெளி யிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

48 நாட்கள் நீடிக்கும் அத்தி வரதர் வைபவத்தின் பாது காப்புப் பணியானது காவல் படையில் பணியாற்றும் ஆண் -பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் உறுதி மற் றும் வெல்லமுடியாத துணி வுக்கு மற்றொரு சான்றாகும். 40 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அற்புதமான நிகழ்வானது வெற்றிகரமான நிகழ்ச்சியாக உருமாற்றம் பெறுவதற்கான ஒரே காரணம் நமது காவல் துறைதான்.

ஒரு பலம்வாய்ந்த மனிதன் தடுமாறி விழும்போது சுட்டிக்காட்டுகிறவர்களோ, ஒரு செயலைச் செய்தவர் அதைவிட சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று குறிப்பிடுபவர்களோ ஒரு பொருட்டல்ல. முகத்தில் தூசி, வியர்வை, ரத்தம் தோய்ந்து களத்தில், துணிவுடன் நின்று முயற்சி செய்பவரையும், என்ன குறை இருந்தும் விடா முயற்சி செய்கிறார்களே அவர் களையுமே ஒட்டுமொத்தப் பெருமையும் சென்று சேரும்.

இதே கடுமையான உழைப் பையும், ஊக்கத்தையும் 17 ஆகஸ்ட் 2019 ஆம் தேதி வரை எடுத்துச்செல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். தமிழக மக்கள் தமிழ்நாடு காவல் துறை மீது வைத்துள்ள நம் பிக்கையைப் பாதுகாக்கும் விதமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணி யாற்றுவோம். இவ்வாறு டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT