வி.தேவதாசன்
சென்னை
கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், நேற்று அதிகாலை பூமியின் ஈர்ப்பு விசை பகுதியிலிருந்து விடுபட்டது.
நிலவில் தரையிறங்கி ஆராய் வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்தி ராயன் 2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம் தேதி ஹரிகோட்டாவி லிருந்து விண்ணில் ஏவியது. ஜிஎஸ் எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப் பட்ட இந்த விண்கலம், தரை யிலிருந்து புறப்பட்ட அடுத்த 16-வது நிமிடத்தில் புவியின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அதன்பின் விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு, ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை 5 தடவை விண்கலத்தின் சுற்றுப் பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதன்மூலம் பூமிக்கும், விண்கலத் துக்குமான தொலைவு அதிகரித்து கொண்டே சென்றது.
5-வது முறை மாற்றப்பட்ட பிறகு, குறைந்தபட்சம் 221 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 585 கி.மீ. கொண்ட சுற்றுப்பாதையில் விண்கலம் பூமியைச் சுற்றி வந்தது.
இந்நிலையில், பூமியின் ஈர்ப்பு விசைப் பகுதியிலிருந்து விடு பட்டு, நிலவை நோக்கி விண்கலத் தின் பயணத்தை மாற்றி அமைப்ப தற்கான நடவடிக்கை நேற்று அதிகாலை 2.21 மணிக்கு மேற் கொள்ளப்பட்டது. இதற்காக திரவ எரிவாயு இயந்திரம் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு, விண்கலத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டது. இத னால் புவிஈர்ப்பு விசை பகுதிக்கு வெளியே சென்ற சந்திரயான்-2 விண் கலம், தற்போது நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.
இந்தப் பயணம் அடுத்த 6 நாட்களுக்கு நீடிக்கும். ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவை நெருங்கும் போது, திரவ எரிவாயு இயந்திரம் மீண்டும் ஒருமுறை இயக்கப்பட்டு விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பின் நிலவின் சுற்றுப் பாதையில் தன் பயணத்தை விண் கலம் தொடங்கும்.
நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன் திரவ எரிவாயு இயந்திரம் மூலம் விண்கலத் தின் வேகம் குறைக்கப்படும். இதன் மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரமும் தொடர்ந்து குறையும். அவ்வாறு நிலவின் தரைப்பகுதியிலிருந்து 100 கி.மீ. உயரத்தில் விண்கலம் இருக்கும்போது, அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி மட்டும் தனியே பிரிக்கப்படும். லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரு பிரிவுகளுடன் கூடிய விண்கலத்தின் மற்றொரு பகுதியின் உயரம் அடுத்தடுத்து குறைக்கப்பட்டு, நிலவின் தரைப் பகுதியிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் நிறுத்தப்படும்.
இந்த குறைந்த உயரத்திலிருந்து செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்துருவப்பகுதியில் லேண்டரை மெதுவாக தரையிறக்கும் நிகழ்வு தான் சவாலாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டபடி லேண்டரை பத்திர மாக தரையிறக்கி, அதிலிருந்து ரோவர் தனியாகப் பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் நகர்ந்துவிட்டால் விண் வெளி வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டும். மேலும், ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தை தரை யிறக்கிய 4-வது நாடு என்ற பெரு மையும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
இந்தியாவுக்கு பெருமை
இந்த சாதனைப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான மயில் சாமி அண்ணாதுரை, “சந்திரயான் 2 பயணம் திட்டமிட்டப்படி நிறை வடைந்தால், நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக் கும். இதுவரை வேறு நாடுகளின் விண்கலங்கள் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது இல்லை.
மேலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில், குறைந்த செலவில் செயல்படுத்தப்படும் திட்டம் என்ற பெருமையும் உண்டு. இஸ்ரோவில் ஒரு விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் குழுவினர் மற்ற பிற தி்ட்டச் செயல்பாடுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு திட்டத்தின் தொழில்நுட்பமும், அனுபவங்களும் மற்ற திட்டங் களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக மங்கல்யான் பயணத்திட்டத்தின் தொழில்நுட் பத்தின் பெரும்பகுதி சந்திராயன் திட்டத்துக்கும் பயன்படுத்து கிறோம்.
நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதியில் நுழைந்து, அங்கே தரையிறங்கு வதற்கு ஏற்ப சில தொழில்நுட்ப மாற்றங்கள் மட்டுமே செய் கிறோம். இதன்காரணமாக, நமது விண்வெளிப் பயணத் திட்டங் களின் வெற்றி விகிதம் அதிகமாக இருப்பதோடு, பிற நாடுகளைவிட திட்டத்துக்கான செலவும் குறை வாக உள்ளது” என்று தெரிவித்தார்.
சந்திரயான் விண்கலத்தின் லேண்டர், ரோவர் பகுதிகள் 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் இருக்கும் எனவும், இந்த நாட்களில் ரோவர் 500 மீட்டர் தூரத்துக்கு நகரும் எனவும் கூறப்படுகிறது.
விண்கலத்தில் பொருத்தப்பட்ட பல்வேறு கருவிகளின் மூலம் நிலவில் நீர் இருப்பு, நிலவின் அதிர்வுத் தன்மை, பாறைகளின் புவியியல் தன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நிலவு மட்டுமின்றி சூரிய குடும் பத்தின் தோற்றம் பற்றிய புதிய தகவல்களும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் சந்திரயான் - 2 விண்கலம் அனுப்ப உள்ள தகவல்களை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன் காத்திருக் கிறார்கள்.