சென்னை
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் சட்டப் பிரிவு மாநிலத் தலைவர் ராம்.சவுந் தரராஜன், டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து தேசத் துரோகம் இழைக்கும் வகையிலும், தேசத்தின் மீது வெறுப்புணர்வை யும், இழிவு உணர்வையும் மக்களிடையே தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
இந்தியா 100-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது என்றும், இந்தியா புதைமணலில் சிக்கி உள்ளது என்றும் பேசியுள்ளார். எனவே, வைகோ மீது அமைதியைச் சீர்குலைத்தல், இறையாண்மை பாதிக்கும் வகையில் பேசுதல், தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.