தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில்  புதிய நிர்வாகிகள் நியமனம் 

செய்திப்பிரிவு

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒருங்கிணைப்பு பொதுச்செயலா ளராக ஏ.அருணாச்சலம், கொள்கை பரப்பு பொதுச்செயலா ளராக முன்னாள் ஐஏஎஸ் அதி காரி ஆர்.ரங்கராஜன் நியமிக்கப் பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளராக ஏ.ஜி.மவுரியா, சார்பு அணிகள் பொதுச்செயலாளராக வி.உமா தேவி, தலைவர் அலுவலகம் பொதுச்செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பஷீர் அகமது நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.

16 மாநிலச் செயலாளர்கள்

சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கென அமைப்பு ஒருங் கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.

புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர் களாக இருப்பார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT