முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று அத்திவரதரை தரிசித்தனர் | படங்கள்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தேவகவுடா, குமாரசாமி, ரஜினிகாந்த் அத்திவரதரை தரிசித்தனர்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான நேற்று முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசித்தனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள், சிறப்பு தரிசன வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க நேற்று காஞ்சிபுரம் வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் சிறப்பு தரிசன வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்தனர்.

இதையடுத்து குமாரசாமி செய்தியாளர் களிடம் பேசியதாவது: வரதராஜப் பெருமாள் கோயில் பெருமைகளை நான் அறிவேன்.

இன்று அத்திவரதரை நேரில் வந்து தரிசித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். நல்ல மழை பெய்ய வேண்டும். இரு மாநிலங்களுக்கான தண்ணீர் பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என அத்திவரதரிடம் வேண்டினேன் என்றார். நேற்று ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்து அத்திவரதரை தரிசித் தார்.

SCROLL FOR NEXT