தஞ்சாவூர்
மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீரை அதிகளவில் கொள்ளிடத்தில் திறந்து கடலில் வீணாக்கி விடாமல், டெல்டாவில் பாசனம் மேற்கொள்ளும் கடைமடை பகுதி களைச் சென்றடையும் வகையில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் 2 எம்பிக்கள், 3 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத் துக் கட்சியினர் முறையிட்டனர்.
அனைத்து கட்சியினர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவை உறுப் பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், கோவி.செழியன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேற்று சந்தித்தனர். அப்போது, மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை வீணாக்காமல் பாசனத்துக்கு பயன்படச் செய்வது குறித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கூறிய தாவது:
காவிரி ஆற்றில் தற்போது அதிகளவு தண்ணீர் வருகிறது. கடந்த காலங்களில் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பியதால் வீணாக கடலில் கலந்தது. தற்போது, அதுபோலச் செய்துவிடாமல் வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவு திறந்து கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் விரைந்து செல்ல உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்துள்ளோம். இதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, குடி மராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பல இடங் களில் இந்தப் பணிகள் 50 சதவீதம் முடியாமலும், இன்னும் பல இடங்களில் பணிகள் தொடங் கப்படாமலும் உள்ளது.
முகாமிட வேண்டும்
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது முதல் அணை மூடப் படும் ஜன.28-ம் தேதி வரை நீர்ப்பாசன ஆலோசனை களுக்கான இணை ஆணை யர் (தனி அலுவலர்) தஞ்சாவூ ரில் முகாமிட்டு களநிலவரங் களை அறிந்து, அதற்கேற்ப நீர் நிர்வாகத்தை அரசின் ஆலோச னையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் கூறினார்.