நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) நேற்று சீல் வைத்தது.
இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை 4-வது குறுக் குத் தெருவில் முறைகேடாக கட்டப்படிருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தரைத் தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான திட்ட அனுமதி பெறப்படவில்லை.
எனவே, 30 நாட்களுக்குள் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு உரிமையாளருக்கு கடந்த மே 28-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உரிமையாளர் அதை பொருட்படுத்தவில்லை. எனவே, அந்தக் கட்டிடத்தை சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று காலை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.