தமிழகம்

73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்: முதல்வர் கொடியேற்றுகிறார் - கோட்டை கொத்தளத்தில் சிறப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நாளை காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்.

இவ்விழாவையொட்டி கோட்டை கொத்தளம், கொடிக்கம் பம், சட்டப்பேரவைக் கட்டிட வளா கம் புதுப்பொலிவுடன் மின்விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டு தயா ராக உள்ளது.

மேலும், கோட்டை கொத்தளம் எதிரில் 4 பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங் கேற்கும் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், எம்பிக் கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமருவதற் கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று காலை 8.50 மணியளவில் கோட்டை கொத்தளத்துக்கு வரும் முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலர் கே.சண்முகம் வரவேற்று, காவல்துறை டிஜிபி, கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு), சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை அறிமுகம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி திறந்த ஜீப்பில் வந்து, காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

அதன்பின், கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப் துல்கலாம் மற்றும் வீரதீர செயலுக் கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமைக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாகப் பணியாற்றியவர்களுக்கான விருது உள்ளிட்ட 22 விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். அதன்பின், மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5 பேருக்கு இனிப்புகள் வழங்கு கிறார். அத்துடன் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

அணிவகுப்பில், முப்படை வீரர் கள், தமிழக காவல்துறையினர், அதிரடிப்படையினர், குதிரைப் படையினர் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT