தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டியது 

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

சர்வதேச சந்தையில் சில வாரங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.3,627-க்கும், பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.29,016-க்கும் விற்கப் பட்டது. நேற்று முன்தினம் சென்னையில் தங்கம் கிராம் ரூ.3,603-க்கும், பவுன் ரூ.28,824 விலையிலும் விற்பனையானது.

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை தொட்டிருப்பது அனை வரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT