கிழக்கு ராஜகோபுரம் அருகே பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகளை அப்புறப் படுத்தும் துப்புரவு தொழிலாளர்கள். 
தமிழகம்

அத்திவரதர் வைபவம்: காலணிகளை அப்புறப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்கள்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் அர்ப் பணிப்பு உணர்வுடன் நாள்தோறும் துப்புரவு தொழிலாளர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.

அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு அத்திவரதரை தரிசனம் செய்தனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தாங்கள் அணிந்து வரும் காலணிகளை கண்ட இடங் களில் போட்டுவிட்டுச் செல்கின்ற னர். இதனால் காஞ்சிபுரம் நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே காலணிகள் குவிந்து கிடக்கின் றன. இப்படி நகர் முழுவதும் சிதறிக்கிடக்கும் காலணிகள் சேகரிக்கப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன் னையா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோயிலை சுற்றி யிருக்கும் பகுதிகளில் பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகளை துப்புரவு தொழிலாளர்கள் அப்புறப் படுத்தி நகராட்சி குப்பை கிடங் குக்கு கொண்டு செல்கின்றனர். பொதுவாகவே அத்திவரதர் வைபவத்தில் அர்ப்பணிப்பு உணர் வுடன் துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் பணிகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து இரவு, பகல் பார்க்காமல் அவர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT