சென்னை
தமிழகத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடகம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 201 கலை ஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். வரும் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா பெயரில் 3 சிறப்பு கலைமா மணி விருதுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடகம், திரைப்படம் உள் ளிட்ட துறைகளில் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அந்த வகை யில், 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டு களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக் கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இது தவிர, 8 மூத்த கலைமாமணி விரு தாளர்களுக்கு அவர்களின் குடும்ப நிலையை கருத்தில்கொண்டு தலா ரூ.25 ஆயிரம் பொற்கிழி, கலை வளர்ச்சிக்குப் பாடுபட்ட 3 தன் னார்வ நிறுவனங்களுக்கு கேடயம், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற் கேடயம், பாரதி, எம்.எஸ்.சுப்புலட் சுமி, பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் ஒன்பது கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பட்டயமும் வழங்கப்பட்டது.
இந்த வகையில் நடிகர்கள் கார்த்தி, பிரபுதேவா, பாண்டிய ராஜன், பொன்வண்ணன், பாண்டு, சூரி, தம்பிராமையா, சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், நடிகை நளினி, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலை மாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
கலைமாமணி விருதுகள், பொற்கிழிகள் மற்றும் கேடயங்களை வழங்கி முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
கலையும், பண்பாடும் ஒன் றோடு ஒன்றாக பிணைந்தவை. தமிழ்நாட்டின் மரபுக் கலைகளின் வழியாக பண்பாட்டை பாதுகாத் திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக ‘கலை பண் பாட்டுத் துறை’ என்ற ஒரு தனித் துறையை ஜெயலலிதா உருவாக் கினார். இத்துறையின் கீழ் செயல் படும் இயல் இசை நாடக மன்றம் என்ற அமைப்பு சார்பில் கலைத் துறையின் மேம்பட்ட வளர்ச்சிக்காக சேவை செய்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கலைமாமணி’ விருது வழங்கப்படு கிறது. இதுவரை, 1,594 கலைஞர் களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று 72 கலைப்பிரிவுகளில், 201 கலைஞர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. நம் நாட்டு விடு தலைக்காகவும், மொழிக்காகவும் நடந்த போராட்டங்கள் வெற்றி யடைந்ததில், கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. கலை ஞர்கள், நாம் நாட்டுக்காக வாழ் கிறோம் என்பதையும், நமது கலை, நாட்டு மக்களுக்காக, மக்களை மகிழ்விப்பதற்காகத்தான் என்பதை யும் உணர்ந்து, கலைக்கு உயரிய சேவையையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும்.
இங்கிருக்கும் கலைஞர்கள் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, கலைமாமணி விருதுக்கான பொற்பதக்கம் 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஆண்டு தோறும் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். அவை யும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப் படும். நலிந்த மூத்த கலைஞர் களுக்கு மாதந்தோறும் வழங்கப் படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத் தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த் தப்படும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையேற்றார். அமைச்சர் கே.பாண்டியராஜன், இயல் இசை நாடக மன்ற தலை வர் தேவா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தலைமைச் செய லர் சண்முகம் வரவேற்றார். அமைச் சர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.