தமிழகம்

மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்ற 1,351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும்.

இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள் போன்ற தகவல்களைப் பெற ssc.nic.in அல்லது sscsr.gov.in என்ற இணையதளங்களை அணுகவும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2019 (மாலை ஐந்து மணிவரை மட்டுமே). இந்தத் தேர்வுகள் அக்டோபர் 14 -ம் தேதியில் இருந்து 18 -ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்தப் பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT