நீலகிரி மாவட்டத்தில் மழை நேற்று ஓய்ந்தது. உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயிலான காலநிலை நிலவியது. சேதங்களை ஆய்வு செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நீலகிரி மாவட்டம் வருகிறார்.
உதகை - கூடலூர் சாலை, ஓவேலி சாலை, சேரங்கோடு சாலை களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர மைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா கூறும்போது, ‘மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதிகாரிகள் மற்றும் அரசு ஊழி யர்கள் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். வெள்ளம் வடிந்ததும் வேளாண் சேதங்கள் மற்றும் குடியிருப்பு சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப் படும். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய வருகிறார். அவர் உதகை முதல் சேரம்பாடி வரை சென்று ஆய்வு செய்ய உள்ளார்’ என்றார். நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் 29, தேவாலாவில் 25, கிளன்மார்கனில் 12, கூடலூரில் 11, அவலாஞ்சியில் 5, கோடநாட்டில் 4 மி.மீட்டர் மழை பதிவானது.