தமிழகம்

மதுரை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: காப்பக நிர்வாகி கைது 

செய்திப்பிரிவு

மதுரை சமயநல்லூரில் மாசா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இதற்கு மதுரை மாவட்டம் கருமாத் தூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆதிசிவன்(41) ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

இக்காப்பகத்தில் 25-க்கும் மேற் பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படிக் கின்றனர். இங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. மாவட்டக் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் சண்முகம் காப்பகத்தில் திடீர் சோதனை நடத் தினார். அங்குள்ள சிறுவர், சிறுமிக ளிடம் தனித்தனியே விசாரித்தார்.

அதில், குறிப்பிட்ட 4 சிறுமிகளை ஆதிசிவன் தனது அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப் படுத்தி பலமுறை பாலியல் தொந் தரவு செய்திருப்பதும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடு வோம், காப்பகத்தை விட்டு வெளியே அனுப்பிவிடுவோம் என மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த 4 சிறுமிக ளும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர். மற்ற குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.

குழந்தைகள் நலக் குழு உறுப் பினர் சண்முகம் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் மகளிர் காவல் ஆய்வாளர் ஆதிசிவன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தார். ஞானபிரகாசத் திடம் விசாரணை நடக்கிறது. காப்ப கத்துக்கு சீல் வைக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT