மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 118 பேருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியதாவது:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித் துள்ள சாரு தியாகராஜனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த 118 பேரும் தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
எனது அரசியல் வாழ்வில் பல அதிகாரிகளுடன் பணியாற்றி யுள்ளேன். அவர்களது அர்ப் பணிப்பு மிகுந்த செயல்பாட்டால் தமிழகம் பெற்ற பயன்களை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக் கும், சமூக மாற்றத்துக்கும் பாடுபட இவர்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.