நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.
கோவையின் மேற்கு பகுதிகள், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலை யடிவார பகுதிகளில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய மழை நேற்று முன்தினம்தான் ஓய்ந்தது. ஒரு வாரம் பெய்த தொடர் மழையால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து நீடிப்பதால் கோவை குளங்கள் நிரம்பி வருகின்றன. இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறிய தாவது:
சித்திரைச்சாவடி தடுப்பணையி லிருந்து பிரிந்து சென்ற நீரால் புதுக் குளம், கொளராம்பதி ஆகிய குளங்கள் நிறைந்துள்ளன. நரசாம்பதிகுளம் நிரம்பும்நிலையில் உள்ளது.
கிருஷ்ணாம்பதி குளத்துக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக் கிறது. குறிச்சி குளம் 70 சதவீதம் நிரம்பி உள்ளது. நீர் வரத்து இதே நிலையில் இருந்தால் வெள்ளலூர் குளம் இரவுக்குள் நிரம்பிவிடும். மற்றொருபுறம் மாதம்பட்டி அருகே உள்ள தடுப்பணையில் இருந்து கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், செங்குளம் ஆகிய நீர் நிலைகளுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதில், சொட்டையாண்டி குட்டை 30 சதவீத அளவுக்கு மட்டுமே நிரம் பியுள்ளது. கங்கநாராயணசமுத் திரம் 60 சதவீத அளவுக்கு நிரம்பியுள் ளது.
பேரூர் பெரியகுளத்தில் பாதி யளவும், செங்குளம் 40 சதவீதமும் நிரம்பியுள்ளன. மொத்தம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த 4 குளங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் காளம்பாளையம் பகுதி யில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப் பால் தாமதமாகியுள்ளது. வாய்க் கால் உடைப்பு சரிசெய்யப்பட்டுள் ளதாலும், வரும் 3 நாட்களுக்கு நொய்யல் ஆற்றில் சீரான நீர்வரத்து இருக்கும் என்பதாலும் அந்த 4 குளங்களையும் நிரப்பிவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதவிர, உக்கடம் பெரிய குளம், செல்வசிந்தாமணி குளங் களுக்கு போதிய அளவு நீர் செல்ல வில்லை. இந்த 2 குளங்களில் மாநக ராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டும் அழகுபடுத்தும் பணிகள் காரணமாக நீர் வருவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை குற்றாலத்தில் மண்சரிவு
கன மழையால் கோவை குற்றா லம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த ஒருவாரமாக தடைவிதிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன் கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணியில் நேற்று வனத்துறையினர் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என்பதால் மண்சரிவை அறியாமல் வந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.