கையுறைகள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். படம்: கோ.கார்த்திக் 
தமிழகம்

காஞ்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கையுறை இல்லை: நோய் பாதிப்பு ஏற்படும் என வேதனை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு கையுறைகள் வழங்கப்படாததால் பணியின்போது காயம் ஏற்பட்டு நோய் பாதிக்கும் நிலை உள்ளதாக பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் 42 நாட்களாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மக்களின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் துப்புரவுப் பணி களை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து துப்பு ரவு தொழிலாளர்கள் வரவழைக் கப்பட்டு, நகரப் பகுதியில் தூய் மைப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

தேனி, ஈரோடு, தஞ்சாவூர், கன்னியாகுமரி, ஜெயங்கொண்டம், கிருஷ்ணகிரி, ராமாநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு ரப்பர் கையுறை வழங்கப்படாததால் வெறும் கைகளால் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி வருகின்றன. சில இடங்களில் கைகளை காயப்படும் பொருட்களை அகற்றும்போது, காயம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், துப்புரவு ஊழியர்களுக்கு கையுறைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பவானி பகுதியை சேர்ந்த சேர்ந்த துப்புரவு தொழிலா ளர்கள் கூறும்போது, ‘‘சிறப்பு பணி யாக காஞ்சிபுரத்தில் ஒருவாரமாக பணிபுரிந்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து கிளம்பும்போது, ‘கையுறைகள், குப்பையை அகற்று வதற்கான உபகரணங்கள், மாஸ்க் மற்றும் உணவு அனைத்தையும் காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும். நீங்கள் அங்கு சென்று பணியில் ஈடுபட்டால் போதும்' என தெரிவித்தனர்.

ஆனால், கையுறை மற்றும் சுகாதாரமான குடிநீர் போன்ற எந்த வசதியும் ஏற்படுத்தித் தர வில்லை. கையுறைகள், உபகரணங் கள் இல்லாததால் குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டே குப்பையை அகற்றி வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT