கோப்புப் படம் 
தமிழகம்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக துண்டுப் பிரசுரம் ஒட்டியதாக 30 மாணவர்களுக்கு நோட்டீஸ்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருவாரூர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டுள்ளது தொடர்பாக விவாதித் ததற்காகவும், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டியதற்காகவும் விளக்கம் கேட்டு 30 மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.

திருவாரூரை அடுத்த நீலக் குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இந்நிலையில், காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகள் சிலர் ஒன்று கூடி விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் துண்டுப் பிரசுரங்களும் ஒட்டப் பட்டிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு, ஜம்மு காஷ் மீரைச் சேர்ந்த 5 மாணவ, மாணவி கள் உட்பட 30 பேருக்கு மத்திய பல் கலைக்கழக பதிவாளர் கடந்த 9-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 3 நாட்களுக்குள் பதி லளிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்று (ஆக.12) முடிவடைகிறது.

இதுகுறித்து மத்தியப் பல் கலைக்கழக மாணவர்கள் சிலர் கூறி யது: கடந்த 2017 முதல் ‘சுதந்திரப் பேச்சாளர்கள்’ என்ற தலைப்பில் அவ்வப்போது மாலை நேரங் களில் மாணவர்கள் கூடி விவாதித்து வருகிறோம். இது பல்கலைக்கழ கத்தில் உள்ள அனைத்து பேராசிரியர்களுக்கும் தெரியும். அந்த அடிப்படையில், காஷ்மீர் விவகாரம் குறித்தும் எங்களுக்குள் புரிதல் ஏற்படுவதற்காக விவாதித் ததை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

மேலும், தேவையற்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங் கள் ஒட்டியதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. துண் டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ள பகுதியானது 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ள பகுதி யாகும். அங்கு யாருக்கும் தெரியாமல் துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவது எளிதானது அல்ல.

எங்கள் மீது வீண்பழி சுமத்த, அரசியல் விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் சிலரது சூழ்ச்சி இதில் உள்ளதால், இதில் பல்கலைக்கழக நிர்வாகம் தீர விசாரிக்க வேண்டும் என்றனர்.

          
SCROLL FOR NEXT