கோப்புப் படம் 
தமிழகம்

கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.25 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்துக்கான தக்காளி தேவையில் 60 சதவீதத்தை ஆந்திர மாநிலமும், 25 சதவீதத்தை கர்நாடக மாநிலமும் பூர்த்தி செய்கின்றன. 15 சதவீதத்தை மட்டுமே தமிழக பகுதிகள் பூர்த்தி செய்கின்றன. அதனால் தமிழகத்தின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களையே நம்பி யிருக்க வேண்டியுள்ளது.

கோயம்பேடு சந்தைக்கும் தமிழக பகுதிகளை விட, அண்டை மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் தக்காளி வருகிறது. அப்பகுதிகளில் ஏற்பட் டிருந்த வறட்சி காரணமாக கடந்த 3 மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.50 வரை உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் ரூ.80 வரை விற்கப் பட்டது. இது ஏழை எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் காய்கறி என்ப தால், இந்த விலை உயர்வு அனைவரையும் பாதித்தது.

தற்போது அண்டை மாநிலங் களில் மழைப்பொழிவு இருந்து வருவதால், கோயம்பேடு சந் தைக்கு தக்காளி வரத்து அதிக ரித்து, அதன் விலை கிலோ ரூ.35-லிருந்து நேற்று ரூ.25 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான வெங்கா யம் ரூ.21, சாம்பார் வெங்காயம், கேரட், ரூ.60, கத்தரிக்காய், பாகற் காய், முருங்கைக்காய் தலா ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.16, அவரைக்காய் ரூ.45, வெண்டைக் காய் ரூ.30, முள்ளங்கி, முட்டைக் கோஸ் ரூ.15, பீன்ஸ் ரூ.80, புடலங் காய் ரூ.20 என விற்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் பட்சத்தில், காய்கறிகள் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT