கமல் | கோப்புப் படம் 
தமிழகம்

கட்சியை பலப்படுத்த கட்டமைப்பு விளக்க கூட்டம்: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை 

கட்சியை பலப்படுத்த புதிய கட்ட மைப்பு விளக்க கூட்டம் நடத்தப் பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நலனை நடைமுறைக்கு கொண்டு வந்து ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பினை பெருக்குவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அதன் முதல்கட்டமாக கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சி கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய நாம் முடிவு எடுத்துள்ளோம். கட்சியின் "புதிய கட்டமைப்பு விளக்க கூட்டம்" வருகிற 14, 15, 16 ஆகிய தேதி களில் மதுரை, திண்டுக்கல், இராம நாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் விருதுநகர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் துணை தலைவர் டாக்டர் ஆர்.மகேந் திரன், பொது செயலாளர் ஆ.அரு ணாச்சலம், பொருளாளர் ஏ.சந்திர சேகரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மதுரையில் இந்நிகழ்வு, ‘2021- நமக்கான ஆட்சி’ என்ற நமது உயரிய நோக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாகும். எனவே, விளக்க கூட்டம் நடைபெறும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும், தொகுதி, பகுதி, கள பொறுப் பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர் கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பி்ட்டுள்ளார்.

SCROLL FOR NEXT