மேற்கு கோபுர மாட வீதிகளில் குவிந்த பக்தர்கள் கூட்டம். 
தமிழகம்

மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்தே செயல்படுகின்றன: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து செயல்படுகின்றன என்று ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவ லர்கள் சிறப்பாக பணிபுரிகின்ற னர். நாங்கள் ஒரே குடும்பமாகச் செயல்படுகிறோம். பணிகள் சரி யாக நடக்க வேண்டும் என்பதால் சில விஷயங்களில் கண்டிக்கக் கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பாக ‘மீம்ஸ்'களை பரப்ப வேண்டாம். எனது பேச்சு தனிப் பட்ட நபருக்கு எதிரானது இல்லை. மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து செயல்படு கின்றன.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்ப தால் கூடுதல் பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தங்க வைத்து அனுப்புவதற்காக கீழம்பி, பி.ஏ.வி. பள்ளி அருகேயும், பச்சையப்பன் பள்ளி மைதானத்திலும் கூடங்கள் அமைத்துள்ளோம். அங்கிருந்து மினி பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கண்ணன் கூறும்போது, ‘‘காஞ்சியில் 8500 காவலர்கள் பணி யில் உள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் காவலர்கள் எண் ணிக்கை 12,500 ஆக உயர்த்தப் படும். காவல் துறைக்கு தேவை யான உதவிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார். மற்ற துறைகளும் காவல் துறையினருடன் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT