என்.சரவணன்
வேலூர்
வேலூர் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்த உளவுத் துறை அதை அதிமுக நிர்வாகிகளி டம் தெரிவித்தும், வெற்றிக்கான முயற்சிகளை யாரும் எடுக்க வில்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும், வெற்றி, தோல்விகள் குறித்து முன் கூட்டியே ஆளும் அரசுக்கு அறிக்கை தருவது உளவுத்துறை யின் வழக்கம். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் கட்சி யினர் கூறுவதை காட்டிலும் உளவுத் துறை அளிக்கும் அறிக்கைகளை அதிகமாக நம்புவார். அதற்கேற்ப தன் தேர்தல் வியூகங்களை மாற்றியமைத்து, பல தேர்தல்களில் வெற்றியை தன்வசப்படுத்தினார்.
வேலூர் மக்களவை தொகுதி யில் இஸ்லாமியர்கள், கிறிஸ்த வர்கள் என 4 லட்சத்துக்கும் மேலாக உள்ள சிறுபான்மையின மக்கள்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றனர். வேலூர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் சிறுபான்மையின வாக்கு களை பெற அதிமுகவும், திமுக வும் கடும் முயற்சிகளை எடுத்து வந்தன.
அதிமுக கூட்டணி கட்சி வேட் பாளர் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூக ஓட்டுகளை அதிகமாக நம்பினாலும், சிறுபான்மையின ஓட்டுகளை பெற கடும் முயற்சிகள் எடுத்து வந்தார். அதேநேரத்தில், சிறுபான்மையின ஓட்டுகள் எப்போதுமே நமக்குதான் என்பதை முழுமையாக நம்பிய திமுகவினர், அந்த ஓட்டுகளை கடைசி வரை தங்கள் பக்கமே இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நாள்வரை வேலூர், அணைக் கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி களில் சிறுபான்மையின ஓட்டுகள் யார் பக்கம் திரும்பும் என்பதை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய்ந்த உளவுத்துறை அதன் அறிக்கையை அதிமுக தலைமை யிடம் கடந்த 3-ம் தேதி மாலை அளித்தது. அதில், அதிமுக - திமுக ஆகிய 2 கட்சிகளும் வெற்றி யின் விளிம்பில் உள்ளதாகவும், திமுக குறைந்த வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள தாகவும், அதை சரி செய்ய சில தொகுதிகளில் அதிமுகவினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிமுக நிர்வாகிகள், உளவுத்துறை அறிக்கையை பெரிதுபடுத்தவில்லை.
உளவுத்துறை அறிக்கைக்கு மதிப்பு கொடுத்து தேர்தல் பணி செய்திருந்தால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என அக்கட்சி யினர் தற்போது தெரிவிக்கின்றனர்.