தமிழகம்

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குமுன்னதாக வரும்படி பயணி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதனால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர் அனுமதி ரத்து

இதேபோல், சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் விமான நிலையத்துக்குள் செல்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீ ஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே வரும் படி அறிவுறுத்துமாறு விமான நிறு வனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT