தமிழகம்

கலைமாமணி விருது விழாவுக்கு தடையில்லை:  உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை

சென்னையில் ஆக.13-ல் நடை பெறும் கலைமாமணி விருது வழங் கும் விழாவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த நாதஸ் வரக் கலைஞர் எஸ்.மாரியப்பன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்துக்கு உறுப்பினர் தேர்வு முறையில் மாற்றம் செய்யப் பட்டு 2015-ல் 22 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். இதற்கு எதி ராக சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 22 பேரும் எந்த கொள்கை முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு 201 பேரை தேர்வு செய்து இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பி னர் செயலர் அறிவித்துள்ளார். விதிப்படி கலைமாமணி விருதுக்கு 40 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 30 முதல் 40 வயதுக்கு உட் பட்டவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறந்த கலைஞர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். பிற துறைகளைச் சேர்ந்த 3 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்தத் தேர்வுப் பட்டிய லுக்கு தடை விதிக்க வேண்டும். ஆக. 13-ல் நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் பிறப்பித்த உத்தரவு:

கலைமாமணி விருது வழங்கும் விழா நடத்த தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ், கொக்கிலிக்கட்டை ஆட்டத்துக்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மரக் கால் ஆட்டக் கலைஞர். இரு கலைக் கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. மரக்கால் ஆட்டக் கலை ஞரை கொக்கிலிக்கட்டை ஆட்டக் கலைஞராக விருதுக்கு தேர்வு செய் யப்பட்டதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டு களாக கலைமாமணி விருது வழங்காதது ஏன் என்பது தெரிய வில்லை. எதிர்காலத்தில் கலைமா மணி விருதுக்கு தேர்வு செய்யப் பட்டோர் பட்டியலை தமிழக அரசு ஆண்டுதோறும் ஜூன் 30-க்குள் அறிவித்து குறிப்பிட்ட காலத்துக் குள் விருது வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT