சென்னை
அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதில், குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய் யும் வகையில் மாவட்ட ஆட்சியர் களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாளில், மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக் குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். ஒவ் வொரு ஆட்சியருக்கும் சுமார் அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தப் படும் திட்டங்களின் தற்போதைய நிலை, தேவைப்படும் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
பின்னர், திட்ட செயல்பாடுகள் குறித்து முதல்வர் அறிவுரை வழங் கினார். ‘பட்டா கிடைக்காதவர்களை கணக்கிட்டு அவர்கள் அனை வருக்கும் பட்டா வழங்க வேண்டும். ஒரு சொட்டு மழைநீரைக்கூட வீணாக்காமல் சேமிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து மாதம்தோறும் கள ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில், 2-ம் நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங் கோட்டையன், பி.தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகியோர் பங்கேற்ற னர். நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி, வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட மாவட்டங்களின் கண்காணிப்பு அதிகாரிகள், பல துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
13 மாவட்ட ஆட்சியர்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் ஆட்சி யர்கள் பங்கேற்றனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. இதில், ஒவ்வொரு ஆட்சியரும் தங்கள் மாவட்டங் களில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்து அரை மணி நேரம் விவரித்தனர். குடிமராமத்து, மழை நீர் சேகரிப்பு, நீர்நிலைகள் புனர மைப்பு ஆகிய திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் வாக்கு எண் ணிக்கை காரணமாக வேலூர் ஆட்சி யரும், கனமழை காரணமாக கோவை, நீலகிரி ஆட்சியர்களும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இவர்கள் வேறொரு நாளில் முதல்வரை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.