சிஎஸ்ஆர் ஸ்பார்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை செலவிடுவது குறித்த விளக்க கையேட்டை வெளியிடுகிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டைரக்டர்ஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.சுந்தரராஜன். உடன், தமிழ்நாடு சினிமா திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், ஆற்காடு இளவரசரின் மகன் நவாபிசதா மொஹமத் ஆசிப் அலி, வ்ஹீல் கிளப்பின் தலைவர் நளினி ஒளிவண்ணன், ஈஷா ஹோம்ஸ் மேலாளர் சுரேஷ் கிருஷ்ணா, பியூச்சர் கேமிக் மேலாளர் ஜோ.சார்லஸ் மார்ட்டின், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்னொவேட்டிவ் சர்வீஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் என்.வெங்கடேஷ், சிஎஸ்ஆர் ஸ்பார்க் அமைப்பின் நிறுவனர் ஆர்.எஸ்.கிருஷ்ணசுவாமி, தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி அறக்கட்டளையின் முன்னாள் தலைமை திட்ட அதிகாரி நிகில் பன்ட். 
தமிழகம்

பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை செலவிடுவது எப்படி?- சென்னையில் தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

செய்திப்பிரிவு

சென்னை

சிஎஸ்ஆர் ஸ்பார்க் அமைப்பு சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) ஆக்கப்பூர்வமாக செல விடுவது எப்படி என்பது குறித்து தொழில் நிறுவனங்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

பெருநிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் நிதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி வருகின்றன. ஆனால் இந்த சிஎஸ்ஆர் நிதியை கொடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும் சமூகத்துக்கு சிறந்த சேவை வழங்கும் சரியான தன்னார்வ தொண்டு நிறுவ னத்தை கண்டறிவதிலும் பெருநிறுவ னங்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

சிஎஸ்ஆர் சட்டம்

அதனால் தமிழகத்தில் உள்ள பெருநிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிஎஸ்ஆர் சட்டத்தைப் பற்றிய எளிய ஆழமான பயன்பாட்டினை புரிந்து கொள்ளும் வகையிலான கருத்தரங்கம், சிஎஸ்ஆர் ஸ்பார்க் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டைரக் டர்ஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.சுந்தரராஜன் பங்கேற்று, பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) செலவிடுவது குறித்த விளக்கக் கையேட்டை வெளியிட்டார். தமிழ்நாடு சினிமா திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், ஆற்காடு இளவரசரின் மகன் நவாபிசதா மொஹமத் ஆசிப் அலி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் வ்ஹீல் கிளப்பின் தலைவர் நளினி ஒளிவண்ணன், ஈஷா ஹோம்ஸ் மேலாளர் சுரேஷ் கிருஷ்ணா, பியூச்சர் கேமிக் மேலாளர் ஜோ.சார்லஸ் மார்ட்டின், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்னொவேட்டிவ் சர்வீஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் என்.வெங்கடேஷ், சிஎஸ்ஆர் ஸ்பார்க் அமைப்பின் நிறுவனர் ஆர்.எஸ்.கிருஷ்ணசுவாமி, தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி அறக்கட்டளையின் முன்னாள் தலைமை திட்ட அதிகாரி நிகில் பன்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT